விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மூன்று மாணவர்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலக்கூடிய மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாகவும், மாநில பாடத்திட்டத்தில் பயிலக்கூடிய மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும், நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய ஆலோசனைகளை வழங்கவில்லை எனவும், அதனால், மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து அந்த மனுவினை ஏற்று தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க...விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழந்த விவகாரம் - கைலெடுத்த மனித உரிமை ஆணையம் !