நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான தகுதிகாண் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே 5ஆம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் 14 நகரங்களில் அமைக்கப்பட்ட 188 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர்.
வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் இடம்பெற்றன. இந்தத் தேர்வில் சுமார் 380 மதிப்பெண்களுக்கு 11, 12ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் 11, 12ஆம் வகுப்பு பாடத்திடத்தில் உள்ள இயற்பியல், தாவரவியல், உயிரியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இருந்தன எனவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.