ETV Bharat / state

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து - ஸ்டாலின் உறுதி - நீட் ரத்து

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

நீட் ரத்து - ஸ்டாலின் உறுதி
நீட் ரத்து - ஸ்டாலின் உறுதி
author img

By

Published : Sep 12, 2020, 7:55 PM IST

நாடு முழுவதும் மருத்துவ நுழைவு மற்றும் தகுதித் தேர்வான நீட் தேர்வு நாளை (செப்டம்பர் 13ஆம் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்விற்கு தயாராகிவரும் மாணவர்கள் சிலர் மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் துயரச் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர், மு.க.ஸ்டாலின், ' மாணவச் செல்வங்களே எட்டு மாதங்கள் மட்டும் பொறுத்திருங்கள். அவசர முடிவுகள் எதையும் எடுத்திடாமல் காத்திருங்கள். விடியல் பிறக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், 'எதிர்காலத்தை இருளாக்கிவிடும் நீட் தேர்வு பற்றி, நாம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அந்த நேரத்தில்கூட, அது இந்த அளவுக்கு உயிர்களைப் பறிக்கும் கொடுமையான பலிபீடமாக இருக்கும் எனச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

நீட் தேர்வுக்கான பயிற்சியில் தொடங்கி, தேர்வு அறைக்குள் நுழைவதற்கான சோதனைகள் வரை, ஒவ்வொன்றும் மாணவர்களை உளவியல் ரீதியாகப் பெரும் தாக்குதலுக்குள்ளாக்கி நிலை குலைய வைக்கின்றன.

தேர்வு உண்டாக்கும் மனவேதனையால் 2017ஆம் ஆண்டில் அரியலூர் அனிதா தொடங்கி, இன்று மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா வரை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைக் கேள்விப்படும்போதெல்லாம் பரிதவித்துப் போகிறேன். ஒவ்வொரு மாணவரும் இறக்கும் போதும் அஞ்சலி செலுத்துவதோடு எல்லாமும் முடிந்துவிடுகிறதா? அவர்கள் நம் வீட்டுக் குழந்தைகள் இல்லையா?

நீட் ஏற்படுத்திய பாதிப்பால் - அச்சத்தால் - நெருக்கடிகளால் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவ - மணிகளின் உள்ளத்தின் நிலையைப் புரிந்துகொள்ளாமல் திசை திருப்பும் மனிதநேயமற்ற போக்கை அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு இனி ஒருவரும் செல்லாதீர். உயிரை மாய்த்துக் கொள்வது, எதற்கும் தீர்வாகாது. உங்களை நம்பி பெற்றோரும், குடும்பமும் – ஏன், இந்த மண்ணும், நாடும் இருக்கிறது.

திமுகவின் ஆட்சி இன்னும் எட்டு மாதங்களில் தமிழ்நாட்டில் அமையும்போது, நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதுவரையிலும் நீட் தேர்வினால் மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கும் அவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். அவர்கள் பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண்களின்படி மருத்துவம் படிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் அமையவிருக்கும் திமுக அரசு உருவாக்கித்தரும். அது மருத்துவக் கல்லூரிகளின் இடங்களை அதிகரிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிட வேண்டிய தேவை ஏற்பட்டாலும் சரி.

எட்டு மாதங்கள் மட்டும் பொறுத்திருங்கள். கலங்காதிருங்கள். அவசர முடிவுகள் எதையும் எடுத்திடாமல் காத்திருங்கள். விடியல் பிறக்கும்'என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.