ETV Bharat / state

போர்க்கால அடிப்படையில் காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ் - தூய காற்று திட்டம்

சென்னை : பெருநகருக்கான தூய காற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Need immediate action for air pollution said MP anbumani ramadoss

author img

By

Published : Sep 5, 2020, 2:59 PM IST

தூய காற்று திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உலகில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 12 லட்சமாக உள்ளது. ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களை காற்று மாசுபாடு உருவாக்குகிறது.

43 விழுக்காடு நுரையீரல் நோய்களுக்கும், 24 விழுக்காடு பக்கவாத பாதிப்புகளுக்கும், 25 விழுக்காடு இதய நோய் பாதிப்புகளுக்கும் காற்று மாசுபாடு காரணம். ஒரு கனமீட்டர் காற்றில் 2.5 நுண்துகள் மாசுக்கள், 10 மைக்ரோ கிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 100 மடங்கு அதிகமாக உள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் உண்மையாக உள்ளது.

இதை உடனடியாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. அதனால், இந்தியாவில் முதல்கட்டமாக 35 எனும் அளவுக்குள் இதனைக் குறைக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இந்திய அரசு 40 மைக்ரோகிராம் என்பதை உச்ச அளவாக அறிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கிற்கு முன்பு, சென்னையில் ஆண்டுக்கு 100 நாள்கள் நச்சுக்காற்றை சுவாசிக்கும் நிலையில் மக்கள் இருந்தனர். சென்னை மாநகரின் காற்று மாசு அளவு, மணலி காற்று மாசு கண்காணிப்புக் கருவி பதிவுகளின்படி, கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதி வரையிலான 365 நாட்களில், 119 நாள்கள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக இருந்துள்ளது.

சென்னையின் 15 இடங்களில் பொது அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் அனைத்து இடங்களிலுமே 70 மைக்ரோ கிராம் அளவுக்கு மேல் 187 மைக்ரோ கிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. மொத்தத்தில் சென்னையில் மக்கள் சுவாசிக்கும் காற்று ஆபத்தாகவே உள்ளது. தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேசிய தூய காற்று திட்டத்தை (National Clean Air Programme) அறிவித்தது. ஆனால், சென்னை அத்திட்டத்தில் இல்லை. மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்காமல் தமிழ்நாடு அரசே சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை (Chennai Clean Air Action Plan) உடனடியாக உருவாக்கி, அதனை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, சென்னை மாநகர மக்களின் தூயக்காற்றுக்கான அடிப்படை மனித உரிமையை காப்பாற்ற வேண்டும்.

செப்டம்பர் 7ஆம் நாள், ‘‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies)’’ என ஐநா அவையால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். குறிப்பாக, சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை (Chennai Clean Air Action Plan) தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.