ETV Bharat / state

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் - சென்னையில் ஒரு வாரத்தில் 3.98 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு!

author img

By

Published : Jul 31, 2023, 12:19 PM IST

சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு கடந்த ஒரு வாரத்தில் 3.98 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Magalir
சென்னை

சென்னை: 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் 'உரிமைத்தொகை வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்படும் என திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம், கடந்த 24ஆம் தேதி தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கப்பட்டது. தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் முதற்கட்டமாக 98 வார்டுகளில் 704 ரேஷன் கடைகளில் 500 அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்று 1,730 சிறப்பு முகாம்கள், கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்கள் மூலம் ஒரு வாரத்தில், அதாவது ஜூலை 30ஆம் தேதி வரை 3.98 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "சென்னையில் உள்ள மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு முழூ வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஜூலை 24ஆம் தேதி 56,590 விண்ணபங்கள், 25ஆம் தேதி 72,380 விண்ணப்பங்கள், ஜூலை 26ஆம் தேதி 72,080 விண்ணப்பங்கள், ஜூலை 27ஆம் தேதி 69,934 விண்ணப்பங்கள், ஜூலை 28ஆம் தேதி 58,753 விண்ணப்பங்கள், ஜூலை 29ஆம் தேதி 43,285 விண்ணப்பங்கள், ஜூலை 30ஆம் தேதி 25,157 விண்ணப்பங்கள் என கடந்த ஒரு வாரத்தில் மொத்தம் 3,98,179 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு முகாம்களுக்கு தேவையான தன்னார்வலர்கள், பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குடும்ப தலைவிகளுக்கு நேற்று வரை(ஜூலை 30) 6.6 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மூன்று கட்டங்களாக விண்ணப்பப் பதிவு நடைபெறவுள்ளது. அதில், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 14,825 நியாயவிலைக் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2ஆம் கட்ட விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் வழங்கும் பணி ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்குகிறது" என்றனர்.

இதையும் படிங்க: பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறதா? - பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.