ETV Bharat / state

மீண்டும் இணைந்த ராஜா ராணி கூட்டணி - நயன்தாரா 75 அப்டேட்! - director atlee

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றில் ராஜா ராணி படக்குழுவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 9, 2023, 4:30 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. முன்னணி நடிகர்களின் படங்களில் தனக்கென தனி இடம்‌ பிடித்து ரசிகர்களின் பட்டாளத்தை கொண்டுள்ளவர். முன்னனி நடிகையான இவர் சமீபத்தில் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு அண்மையில் இரு ஆண் குழந்தைகள் பிறந்தன.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் ஜெயம் ரவியுடன் இறைவன் படத்திலும் நடித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக அவர் மீண்டும் பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவரின் திரையுலகில் இந்த திரைப்படம் 75ஆவது திரைப்படமாக அமைகிறது.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 'லேடி சூப்பர் ஸ்டார் 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளரான நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார்.

பேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது . இப்படத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படத்துக்கு பிறகு மீண்டும் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளனர். இதனால் இந்த திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் சென்னையில் நடத்தி முடித்து விட்டனர்.

மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பானது திருச்சியிலும், சென்னையின் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படமானது இதுவரை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும் தமன் இசையில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலை மற்றும் படத்தொகுப்பிற்கு ஜி. துரைராஜ்,பிரவீன் பொறுப்பெடுக்கின்றனர்.

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் நயன்தாரா நடித்த O2, கனெக்ட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதில்லை" - டிரெண்டாகும் செல்வராகவன் தத்துவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.