சென்னை: மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று (மார்ச் 28) தொடங்கியது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் அகில இந்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சி.என்.ஜி. ஆகியவற்றின் விலை உயர்வுக்கும் தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனியார் மயமாக்குதலை மத்திய அரசு நிறுத்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும், இந்த திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது.
![பேருந்துகள் இயக்காததால் சென்னை புறநகர்ப் பகுதியில் பொதுமக்கள் அவதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-bus-strick-image-7210963_28032022101038_2803f_1648442438_490.jpg)
தொழிற்சங்களின் நாடு தழுவிய போராட்டம் காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். வாரத்தின் முதல் நாளான இன்று பொதுமக்கள் பரபரப்பாக இயங்க தொடங்கிய நிலையில் போராட்டம் காரணமாகப் பேருந்துகள் ஓடாததால் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் காலை நிலவரப்படி 10 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சென்னையில் 3,500 பேருந்துகள் இயங்கும் நிலையில் தற்போது 700 மட்டுமே இயங்குகின்றன.
![பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14856052_965_14856052_1648446253913.png)
தொழிற்சங்களின் நாடு தழுவிய போராட்டம் காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். வாரத்தின் முதல் நாளான இன்று பொதுமக்கள் பரபரப்பாக இயங்க தொடங்கிய நிலையில் போராட்டம் காரணமாகப் பேருந்துகள் ஓடாததால் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் காலை நிலவரப்படி 10 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சென்னையில் 3,500 பேருந்துகள் இயங்கும் நிலையில் தற்போது 700 மட்டுமே இயங்குகிறது.
![நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-publicsuffering-visual-script-7208368_28032022093915_2803f_1648440555_981.png)
சென்னை புறநகர் பகுதிகளில் தாம்பரம், குரோம்பேட்டை பணிமனைகளில் இருந்து சுமார் 20 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் பொதுமக்கள் வேலைக்குச் செல்வோர் பள்ளிகளுக்குச் செல்வோர் அவதி அடைந்துள்ளனர்.
இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, வடகை டாக்ஸிகளில் செல்கினர். ஒரு சில தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. மேலும் பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய ரயில் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
![பேருந்துகள் இயக்காததால் சென்னை புறநகர்ப் பகுதியில் பொதுமக்கள் அவதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-bus-strick-image-7210963_28032022101038_2803f_1648442438_490.jpg)
சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இதேநிலைதான் உள்ளது. செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 85 பேருந்துகளில் 15 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. கல்பாக்கம் பணிமனையில் 36 பேருந்துகளில் 15 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. மதுராந்தகம் 49 பேருந்துகள் உள்ள நிலையில் தற்போது 8 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசுப் போக்குவரத்து பணிமனையில் உள்ள 65 பேருந்துக்களில் தற்போது வரை 25 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பேருந்துகளும் , மினி பஸ்களும் வழக்கம் போல் இயங்குகின்றன. விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 36 பேருந்துகளில் 27 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
![பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-bus-strick-image-7210963_28032022101038_2803f_1648442438_47.jpg)
மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனையில் இருந்து 15 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. கோவையில் 40 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவையில் இருந்து கேரளாவிற்கு தமிழ்நாடு பேருந்துகள் இயக்கப்பட வில்லை. கேரள மாநில பேருந்துகளும் தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.
ஒரு சில மாவட்டங்களில் நகரங்களில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்குகின்றன. இந்த போராட்டத்தின் காரணமாகக் கிராமப்புறங்களில் பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.