தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை விழுந்தது மிகவும் வருத்தமாக உள்ளது.
- வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குழந்தைகளின் பாதுகாப்புக்கு அனைத்துத் தரப்பினரும் அதிக முக்கியத்துவம் அளித்து, பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை தாமாக முன்வந்து மூடிய மக்கள்!