ETV Bharat / state

சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்த காவலர்களுக்கு பாராட்டு! - நந்தம்பாக்கம் காவல்துறை

சென்னை: சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார் ஆகியோருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

national-commission-for-the-protection-of-chilld-applauds-for-the-police-who-helped-for-child-surgery

author img

By

Published : Jul 18, 2020, 7:27 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கவிஷ்கா என்னும் சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ரூ. 5 லட்சம் தேவைப்பட்டது. அவரது தந்தை கார்த்திக் பண உதவி கிடைக்காமல் மிகுந்த வேதனையில் தவித்து வந்தார். இதையடுத்து நந்தம்பாக்கம் காவல்துறை குற்றப்பிரிவு ஆய்வாளர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார், காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து ரூ. 5 லட்சம் திரட்டி உதவியிருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், சிறுமி காப்பாற்றப்பட்டு வீடு திரும்பியுள்ளார். குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய இந்த இரு காவல்துறை அலுவலர்களின் சேவையைப் பாராட்டி காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.

கவிஷ்கா
கவிஷ்கா

இதனையறிந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் டி.ஜி.ஆனந்த் இன்று நந்தம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்றார். சிறுமியின் உயிரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் தங்கராஜ், தலைமைக்காவலர் செந்தில் குமார் ஆகியோரை காவல் நிலையத்திலேயே நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: கறுப்பர் கூட்டத்துக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.