ETV Bharat / state

விக்னேஷ் லாக்கப் மரணம்.. ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் - விக்னேஷ் மரணம் சிபிசிஐடி விசாரணை

காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்த விக்னேஷ் வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு பரிந்துரை அளித்துள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு பரிந்துரை  national-commission-for-scheduled-caste-recommends-dgp-and-chief-secretary-to-arrest-culprits-in-vignesh-lockes-death-and-iit-student-sexual-assault-case விக்னேஷ் லாக்கப் மரணம்.. ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

author img

By

Published : May 7, 2022, 8:23 AM IST

சென்னை கெல்லீஸ் சந்திப்பில் ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு தலைமைச் செயலக காலனி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சோதனை செய்தபோது அதில் இருந்த இருவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். அவர்களை சோதனையிட்ட காவல்துறையினர் 5 கிராம் கஞ்சா மற்றும் பட்டா கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர்.

காவலர்கள் பணியிடை நீக்கம்: அதன் பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டதில் ஒருவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ் என்பதும் மற்றொருவர் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்தது. இதில் கஞ்சா மற்றும் பட்டாக் கத்தியை மறைத்து வைத்திருந்த விக்னேஷ் சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவர் என தெரியவந்தது.

விக்னேஷ் லாக்கப் மரணம் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

அதன் பின்னர் திடீரென காவல்நிலையத்தில் விக்னேஷ் உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைச் செயலக காலனி காவல்நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், ஊர்காவல் படை தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை: இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவத்தைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. மேலும் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தர் சமீபத்தில் தமிழ்நாடு வந்து உயிரிழந்த விக்னேஷ் நண்பர் ரமேஷிடம் புழல் சிறையில் வைத்து விசாரணை மேற்கொண்டார்.

டிஜிபிக்கு வழங்கிய பரிந்துரை: அப்போது காவல்துறையினர் தங்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் புழல் சிறையில் தன்னை தொடர்ச்சியாக துன்புறுத்துவதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில் நேற்று (மே.6) தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இவ்வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர்களைத் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழ்நாடு டிஜிபிக்கு பரிந்துரை அளித்துள்ளனர்.

விக்னேஷ் மரணம் சிபிசிஐடி விசாரணை
விக்னேஷ் மரணம் சிபிசிஐடி விசாரணை

மேலும், புழல் சிறையில் உள்ள ரமேஷ் என்பவர் விடுதலை செய்யப்பட்டு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் வழக்கில் தொடர்புடைய ரமேஷ் மற்றும் விக்னேஷ் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை
ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை

உடனடியாக கைது செய்ய வேண்டும்: இதனிடையே, ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை அளித்துள்ளனர். மேலும், இந்த பரிந்துரையை 2 வாரத்திற்குள் செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: விக்னேஷ் கொலை வழக்கு - யார் முதல் குற்றவாளி? தீவிர விசாரணை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.