ETV Bharat / state

பிரதான கட்சிகளுக்கு சவாலாகுமா நாம் தமிழர் கட்சி?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஆளும் மற்றும் எதிர்கட்சிகளுக்கு சவாலாக நாம் தமிழர் கட்சி அங்கம் வகிக்குமா என்பது குறித்த விரிவான செய்தியை காணலாம்.

Erode East By Poll: பிரதான கட்சிகளுக்கு சவாலாகுமா நாம் தமிழர் கட்சி?

author img

By

Published : Jan 31, 2023, 8:52 AM IST

Updated : Jan 31, 2023, 4:52 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல், வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜன.31) தொடங்குகிறது. இதனிடையே திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரதான எதிர்கட்சியான அதிமுகவில் நிலவும் ஒற்றைத்தலைமை விவகாரத்தால், ஈபிஎஸ் - ஓபிஎஸ் இரு தரப்பிலும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

முன்னேறி செல்கிறதா நாம் தமிழர் கட்சி?

நாம் தமிழர் கட்சி கடந்த 2010, மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி, எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது. எனினும், அந்த கட்சியினால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

அப்போது அக்கட்சியின் வாக்குகள் 1.1 சதவீதமாக இருந்தது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. எனினும் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்து 3.9 சதவீதத்தை பெற்றது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காது’ என்பதை அடிக்கடி பேசி வந்தார். அடுத்ததாக நடந்து முடிந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்று தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்த படியாக 3ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

கடந்த கால தேர்தல்களை ஒப்பிடுகையில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், கணிசமான வாக்கு வங்கிகளை பெற்றிருந்தது. இது மற்ற கட்சிகளுக்கு குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகளுக்கு பெரிய சவாலாகவே இருந்தது.

வாக்கு வங்கியை பிரிக்கிறதா நாதக?

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 1 சதவீத வாக்கு வங்கியில் தோற்ற நிலையில், அதிமுக நூலிழையில் வென்று ஆட்சியை பிடித்தது. இதற்கு காரணம் நாம் தமிழர் கட்சியாக இருந்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதினர். அதேபோல் 2021 சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3ஆவது கட்சியாக உருவெடுத்ததால், இது திமுக - அதிமுக கட்சிகளின் வாக்குகளை தங்களது பக்கம் மாற்றியிருக்கலாம் என்கின்றனர்.

இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் அனைத்து இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. குறிப்பாக 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற 24 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி களம் கண்டது. எனினும், எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

மேலும் 2016இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 சதவீத வாக்குகளை பெற்று 5ஆவது இடத்தில் இருந்த நிலையில், 2019ஆம் நடந்த மக்களவை தேர்தலில் 3.65 விழுக்காடு வாக்கு வங்கிகளை பெற்று 4ஆவது இடத்திற்கு வந்தது. பின்னர் 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 7.05 சதவீத வாக்குகளை பெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியது.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் இடும்பாவனம் கார்த்திக்

இடும்பாவனம் கார்த்திக்கின் கருத்து:

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற ஒரு மாயை உண்டு. எனினும், கடந்த இடைத்தேர்தல் ஆர்.கே.நகரில் நடந்தபோது ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி கூட வெற்றி பெற முடியவில்லை.

ஆனால் எங்கள் கட்சியை பொறுத்தவரை சில கோட்பாடுகள், ஆளும் கட்சி மற்றும் சமூக அவலங்களை எடுத்து சொல்லுதல் உள்ளிட்டவையை மக்களிடம் எடுத்துச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். மேலும் கடந்த காலங்களை பார்ப்போம் என்றால், தேர்தல்களில் நிரந்தர வெற்றி - தோல்வி என்பதெல்லாம் உண்டு.

ஆனால் நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை, வெற்றி கணக்கை இன்னும் தொடங்கவே இல்லை. கட்சியின் வாக்கு வங்கி 1.1 விழுக்காட்டில் இருந்து 7 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது வாக்கு வங்கிகளை வைத்துக்கொண்டு வெற்றி - தோல்வி என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கிகளை பெற்று, கட்சி வளர்கிறது என்று பேசுவோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்தது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, தோல்வியடைந்து வெற்றியை சந்திக்க முடியவில்லை. ஆனாலும் வாக்கு வங்கிகள் கிடைக்கிறது. கட்சியும் வளர்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்த வரை ஆளும் கட்சியோ அல்லது எதிர்கட்சியோ வெற்றி பெற்றால் ,அவைகளுக்கு கூடுதலாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் கிடைக்கும். அதே சமயம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால், ஜனநாயக மறுமலர்ச்சி மலரும். அது மட்டுமல்லாமல், கட்சிக்கு ஒரு புதிய பாய்ச்சலாகவும் இருக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

Last Updated : Jan 31, 2023, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.