வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்ஷினியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும், அவர்களுக்கு தேவையான திட்டங்களைப் பெற்றுத் தருவேன் என்றும் தெரிவித்தார்.
வட சென்னை பகுதியில் உழைக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். நலத்திட்டங்கள் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும், மீனவர்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுவதாக காளியம்மாள் தெரிவித்தார்.