கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனைக் கட்டுப்படுத்த எவ்வித தளர்வுகளுமின்றி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விரைவாக பரிசோதனை மேற்கொள்ள ரேபிட் கிட்களை அரசு வாங்கியுள்ளது. இதுதவிர கரோனா பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை போன்றவற்றையும் இறக்குமதி செய்கிறது. வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்க்கு மருத்துவ உபகரணங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்த சரக்கு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து 57 பாா்சல்களில் N95 மாஸ்க்குகள் வந்தன. விமான நிலைய சுங்க அலுவலர்கள் கரோனா வைரஸ் பாதுகாப்பு அடிப்படையில் அந்த பாா்சல்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக ஆய்வு செய்து டெலிவரிக்கு கொடுத்து அனுப்பினர்.
இதையும் படிங்க: பிரதமருடன் முதலமைச்சர் பேச்சு: கூடுதல் ரேபிட் கருவிகளை வழங்குவதாக உறுதி!