ETV Bharat / state

சென்னையில் விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்ம மரணம் - லாக்அப் டெத்

கேகே நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற நபர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற பிறகே உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

mysterious-death-of-a-young-man-who-returned-to-chennai-for-trial

author img

By

Published : Jan 6, 2021, 2:40 PM IST

சென்னை கேகே நகர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சூர்யா(20). இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு தனது நண்பருடன் மது அருந்தியுள்ளார். பின்னர் இவர், மதுபோதையில் கேகே நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே வந்த காரை தடுத்து நிறுத்தி காரின் கண்ணாடியை அடித்து உடைத்து, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து காரின் உரிமையாளர் ராஜா சரவணன் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், எம்ஜிஆர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான காவலர்கள் டிசம்பர் 31ஆம் தேதி சூர்யாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சூர்யாவும் கார் உரிமையாளர் சரவணனும் சமாதானமாக செல்வதாக உறுதியளித்ததையடுத்து, காவலர்கள் வழக்கு பதியாமல் சூர்யாவை விசாரணை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த சூர்யா திடீரென உடல் நலம் பாதிக்கபட்டதை அடுத்து அவரது உறவினர்கள் அவரை வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமடைந்ததால், அவர் நேற்று கேகே நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சூர்யாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று இரவு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து உறவினர்கள் ராயப்பேட்டை மருத்துவமனை வாயிலில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதன் காரணமாக சூர்யாவின் உடல் உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் திடீர் மரணம் - உறவினர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.