இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- சிறப்பு ஆசிரியர்களான உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பணியிடங்களில் ஆயிரத்து 325 பேரினை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அவற்றில் இசை பிரிவில் 86 பணியாளர்களை தேர்வு செய்வதற்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012-2016ஆம் ஆண்டிற்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்விற்கான முடிவுகள் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது.
- தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சிறப்பாசிரியர் பணிக்கான தகுதி பெற்றவர்களில் தற்காலிக தேர்வு பட்டியல் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் தேர்வர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
- இவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் இசை ஆசிரியர்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் இன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.