ETV Bharat / state

விமானத்தின் இருக்கையில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள்! - chennai airport gold smuggling

சென்னை: மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமான இருக்கையின் அடியிலிருந்து ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

gold smuggling
author img

By

Published : Nov 15, 2019, 10:43 AM IST

சென்னை விமான நிலையத்திற்கு மஸ்கட்டிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து வந்தனர். அப்போது விமானத்தில் ஒருவரின் இருக்கைக்கு அடியில் கருப்பு டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் இருந்ததைக் கண்டு விமான நிலைய சுங்கத்துறைஅலுவலர்களுக்கு விமான ஊழியர்கள் தகவலளித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் பார்சலை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில் மூன்று கிலோ 365 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ஒரு கோடியே 33 லட்சம் ரூபாயாகும்.

விமான இருக்கையில் பிடிபட்ட தங்கம்
விமான இருக்கையில் பிடிபட்ட தங்கம்

மேலும் , இதற்கு பயணிகள் எவரும் உரிமை கோராத நிலையில், தங்கத்தை கடத்தி வந்தது யார்? கடத்தல் தங்கத்தை இருக்கையின் அடியில் வைத்து சென்றது ஏன் என்ற பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள்

Intro:சென்னைக்கு மஸ்கட்டில் இருந்து வந்த விமான இருக்கையின் அடியில் இருந்து ரூ. 1 கோடியே 33 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
Body:சென்னைக்கு மஸ்கட்டில் இருந்து வந்த விமான இருக்கையின் அடியில் இருந்து ரூ. 1 கோடியே 33 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு மஸ்கட்டில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்ய வந்தனர். அப்போது விமானத்தில் ஒரு இறக்கையின் அடியில் பார்சல் இருந்ததை கண்டு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வந்து பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்தன. ரூ. 1 கோடியே 33 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 365 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்தது யார்? எதற்காக கடத்தல் தங்கத்தை இருக்கையின் அடியில் வைத்து ஏன் என்ற கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.