ஆவடி அடுத்த அரிக்கமேடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். சசிகுமாரின் வீட்டருகே அன்பழகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். சில நாட்களுக்கு முன்பு சசிகுமார் வளர்த்துவந்த கோழி அன்பழகனின் காம்பவுண்டுக்குள் சென்று மேய்ந்துள்ளது.
இதையடுத்து அன்பழகனின் மனைவிக்கும், சசிகுமாரின் மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையின்போது அன்பழகனுக்கும் சசிகுமாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு, இருவரும் தரையில் கட்டிப் புரண்டு சண்டையிட்டுள்ளனர்.
![ஆவடி கொலை கோழித்தகராறில் நிகழ்ந்த கொலை சென்னை செய்திகள் chennai news chennai crime news aavadi murder news](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8085124_pic.png)
இதில், பின்பக்க தலையில் காயம் ஏற்பட்ட சசிகுமார் மயக்கமடைந்துள்ளார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சசிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிசிக்கை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான காவலர்கள், சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கொலை வழக்குப் பதிவு செய்து அன்ழகனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: காங்.மாணவர் அணித் தலைவரின் பிரியாணி விருந்து.. 50 பேர் மீது வழக்குப் பதிவு!