சென்னை: 2019, 2020ஆம் ஆண்டுகளில் எவ்வளவு கொலை வழக்குகள், எத்தனை கிலோ போதை பொருட்கள் பறிமுதல், செல்போன் பறிப்பு, வாகன விபத்து உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு மாநகராட்சி காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வழக்குகள் | 2019 | 2020 |
கொலை வழக்கு | 173 வழக்கு | 147 வழக்கு |
சங்கிலி பறிப்பு | 310 வழக்கு | 246 வழக்கு |
போதை பொருட்கள் | 452 வழக்கு (1128 கிலோ) | 522 வழக்கு (2966 கிலோ) |
வாகன விபத்து | 1229 விபத்து | 839 விபத்து |
மேலும் இந்த நான்கு மாதங்களில் மட்டும் கணினி வழி குற்றப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடியே 52 லட்சத்து 61 ஆயிரத்து 952 ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கவும், ரவுடிகள் மற்றும் வழக்கமான குற்றங்கள் புரிந்து வரும் குற்றவாளிகள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக 542 சமூக விரோதிகள் சென்னை காவல் துறையால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கேரளாவை உலுக்கிய அபயா கொலை வழக்கு!