சென்னை: நாட்டின் 73ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சேவைகளை பெற வலியுறுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் அட்டையை, பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட, அதனை மூத்த நீதிபதி துரைசாமி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க :Republic day 2022 - காவலர் பாபு ராம் குடும்பத்தினரிடம் அசோக் சக்ரா விருது வழங்கிய குடியரசுத் தலைவர்