ETV Bharat / state

"பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திடுக" - சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

அரசு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை, உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

Multi
Multi
author img

By

Published : Jan 6, 2023, 10:32 PM IST

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது, "தமிழ்நாட்டில் மருத்துவத்துறை மாவட்ட இணை இயக்குநர்கள் மூலம், 2012ஆம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், இட ஒதுக்கீட்டையும் பின்பற்றி, 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டு, தினக்கூலி அடிப்படையில் 2500-க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்கள் ஐந்தாண்டு கால சேவையை முடித்தவுடன், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணியில் சேர்ந்து பத்து ஆண்டுகளாகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தினக் கூலி அடிப்படையிலேயே பணி செய்து வருகின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, தமிழ்நாடு அரசு இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய திமுக எம்எல்ஏ வேலு சட்டமன்றத்தில் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அன்றைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், இந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 4 முதல் 5 மாதங்களாக அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. இந்த ஊதிய நிலுவையையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களை பணி நீக்கம் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு பணி பாதுகாப்பும், பணி நிரந்தரமும் வழங்குவதோடு, 6 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம் மூலம், மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வை திணிக்கிறது. இது மாநில உரிமைகளுக்கும், சம நீதிக்கும் அடித்தட்டு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் நலனுக்கும் எதிரானதாகும். எனவே, நெக்ஸ்ட் தேர்வை தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்க்க வேண்டும். இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் செயல்படும், மது அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் மறுவாழ்வு மையங்களில் பணிபுரியும் 14 மன நல நிரந்தர மருத்துவர்களுக்கு, கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அந்த ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். இது போல மருத்துவத்துறையில் ஏராளமானொருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 'திமுகவின் ஆட்சிக்காலம் எப்போதும் தமிழாட்சி காலம்' - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.