ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை ரூல் கர்வ் விதியினை ரத்து செய்திடுக - ஓபிஎஸ் - முல்லைப் பெரியாறு அணை விவகாரம்

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கவும், ரூல் கர்வ் விதியினை ரத்து செய்யவும் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ரூல் கர்வ் விதியினை ரத்து செய்ய வலியுறுத்தல்- OPS

author img

By

Published : Aug 7, 2022, 5:18 PM IST

சென்னை: இதுகுறித்து ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், அணைப் பலப்படுத்தும் பணிகளுக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதனை 2014ஆம் ஆண்டு தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மூலம் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு பெறப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பலமுறை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. இதை நான் ஏற்கனவே அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன்

தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியது. உடனே, கேரள முதலமைச்சர் , அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து உள்ளதால், அணை நீர் மட்டம் திடீரென உயர வாய்ப்புள்ளது என்றும், அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும், நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும், மாநில விவசாயிகளைக் கலந்து ஆலோசிக்காமல், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 534 கன அடி நீரை கேரளப் பகுதிக்கு திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த முல்லைப் பெரியாறு அணையினால் பயனடைந்து வரும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையில் 142 வரை நீரைத் தேக்காததற்கு ‘ரூல் கர்வ்’ என்ற விதி தான் காரணம் என்றும், இந்த விதியின் காரணமாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத சூழ்நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த ரூல் கர்வ் விதிக்கு விவசாய சங்கங்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. அதிமுக ஆட்சியில் இருந்தவரை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது ‘ரூல் கர்வ்’ பிரச்சனை இல்லை என்றே நான் கருதுகிறேன். இது தொடர்பான வழக்கு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் முன்பு வந்தபோது, ‘ரூல் கர்வ்’ தொடர்பான விவரங்களை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்ததாக அறிகிறேன்.

ஆனால், அதன் மீது முடிவு எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. தற்போது இந்த ‘ரூல் கர்வ்' விதி தான் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு காரணமாக பேசப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை என்பது தென் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதால், இந்த ‘ரூல் கர்வ்’ விதிக்கு தமிழ்நாடு அரசு எப்போது ஒப்புதல் கொடுத்தது? இதற்கான அனுமதி யாரால் அளிக்கப்பட்டது? இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்கப்பட்டதா? தமிழ்நாடு அரசினுடைய ஒப்புதல் இல்லாமலேயே மத்திய நீர் வள ஆணையம் இந்த ‘ரூல் கர்வ்’ விதியை வகுத்துள்ளதா? என்பதையெல்லாம் திமுக அரசு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

ரூல் கர்வ் அட்டவணையை அனைவரின் பார்வைக்கு வெளியிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அவர்களிடையே இருக்கிறது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ‘ரூல் கர்வ்’ விதி குறித்து நாட்டு மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கவும், ‘ரூல் கர்வ்’ அட்டவணையை அனைவரின் பார்வைக்கு வெளியிடவும், தமிழ்நாடு விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய ‘ரூல் கர்வ்’ குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு, இதனை எதிர்த்து மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் டேட்டா லாஸ் - செயற்கைக்கோள்களின் நிலையை அறிய முடியவில்லை என இஸ்ரோ தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.