சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை ரயில் சேவை இருந்தது. இதனையடுத்து பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. தற்போது, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாள்தோறும் 150ம் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் போக்குவரத்து நெரிசலையும், பயண நேரம் குறைப்புதற்கு சென்னை கடற்கரையில் இருந்து, சிந்தாரிப்பேட்டை, மயிலாப்பூர், திருவான்மியூர் வழியாக வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை 1997-ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.
4வது வழித்தடம்: எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது ரயில் பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ரூ.279 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ. புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்ததுள்ளது. இந்த 4வது பாதைக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
அதேப்போல், சென்னையின் புறநகர் பகுதிகளான கும்மிடிப்பூண்டி, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு கடற்கரை வழியாக தினமும் 59 மின்சார ரயில் சேவைகள் இயக்கபட்டிருந்தன. இந்த 59 ரயில்களும், கடற்கரை வரை மட்டுமே இயக்கபட உள்ளன.
மேலும், சென்னை கடற்கரை முதல் சிந்தாரிப்பேட்டை வரை 7 மாத காலத்திற்கு, பறக்கும் (சென்னை கோட்டை, பார்க் ரயில்நிலையம், சிந்தாரிப்பேட்டை) ஆகிய 3 ரயில்நிலையங்களில், அதாவது, 3.53 கிலோ மீட்டர் இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் சீரமத்திற்கு உள்ளாக கூடாது என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: Onam Festival: ஓணம் பண்டிகை முன்னிட்டு பூக்கள் விற்பனை அமோகம் -திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி!
இது குறித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டப்போது, "சென்னை - எழும்பூர் இடையேயான புதிய வழித்தடம் சுமார் ரூ.279 கோடி ரூபாய் மதிப்பில் அமைகிறது. இதனை கருத்தில் கொண்டு பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவுபெற்ற பிறகு பறக்கும் ரயில் சேவை மீண்டும் பழையபடி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனால், சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையிலான வழியில், தற்போது, வேளச்சேரி வரை தான் ரயில்கள் இயக்கபடும் என்றும், புறநகரில் இருந்தும் வேளச்சேரி வரை இயக்கபட்ட ரயில்கள் அனைத்தும், சென்னை கடற்கரை வரை தான் இயக்கப்படும் என்றும் சென்னை கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாக கூடாது என்று பயணிகளுக்கு பேருந்து சேவைக்கு உரிய ஏற்பாடு செய்து வருகிறோம். ஏற்கனவே, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வழியாக சென்ட்ரல், பிராட்வே, திருவொற்றியூர், அண்ணா சதுக்கம், சென்னை கடற்கரை ரயில்நிலையம் வழியாக தினமும் 391 பேருந்துகள், அதவாது 3,000 சேவையும் மேல் இயக்கி வருகிறோம். இந்நிலையில், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 27) முதல் சென்ட்ரல், கோட்டை, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தினமும் 140 கூடுதல் பேருந்து சேவை அளிக்கப்பட உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6 கட்டிவிட்டு 45 தடுப்பணைகளுக்கு கணக்கு.. ரூ.30 லட்சம் சுருட்டிய அதிகாரிகள்.. பெரம்பலூரில் நடந்தது என்ன?