அறிவிப்புகள்:
1. விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்திடவும், 2022-2023 ஆம் ஆண்டில் நெல் தரிசில் பயறு சாகுபடி திட்டம் 10 லட்சம் ஏக்கரில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
2. செங்கல்வராயன் பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளுக்கு அரவை இயந்திரம் பகுதிக்கு தேவையான கியர் பக்ஷிகள் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
3. வேலூர் அறிஞர் அண்ணா தர்மபுரி சர்க்கரை ஆலைகளின் அரவை இயந்திரம் மின்மோட்டார் கட்டுப்படுத்தும் கருவிகளும் செங்கல்வராயன் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் சக்கரத்துடன் கூடிய அழுத்த உருளையின் மின் மோட்டாரை கட்டுப்படுத்தும் கருவியும் 2022-2023 ஆம் ஆண்டில் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
4. கள்ளக்குறிச்சி, செங்கல்வராயன் பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளில் பொருளை கொள்முதல் செய்யவும் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி 2 எம்ஆர்கே செங்கல்வராயன் தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவை பகுதியினை தானியங்கி மயமாகவும் 2022-2023 ஆம் ஆண்டில் 3 கோடியே 81 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
5. 2022-23 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கொதிகலன் நீரேற்றம் பம்பும், தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை நிலைய மின்மோட்டார் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
6. 2022-23 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா பெரம்பலூர் கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் வறுத்த முறையில் இயங்கும் திறப்பு தடுக்கு இதழ் 92 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.
7. கரும்பு தானியத்திலிருந்து எத்தனால் தயாரிப்பினை ஊக்கப்படுத்தி எத்தனால் ஆலைத் தொடர்ச்சியாக இயங்கும் வகையில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் லிட்டர் திறனுடைய எத்தனால் மாலையினை பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு 10 லட்சம் ரூபாய் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
8. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 2022-2023ஆம் ஆண்டில் குழு அமைக்கப்படும்.
9. 2022-2023ஆம் ஆண்டில் தர்மபுரி மாவட்டத்தில் மா மருத்துவ மையமும் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லி மருத்துவ மையமும் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
10. தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடியில் அதிகரித்திட 2023-2023ஆம் ஆண்டில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் முந்திரி மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்.
11. தமிழகத்தில் வெங்காய சாகுபடி பரப்பினை உயர்த்தியும் வெங்காய சேமிப்பு அமைப்புகளை உருவாக்கி பொதுமக்களுக்கு ஆண்டு முழுவதும் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையில் 2023ஆம் ஆண்டில் வெங்காய சாகுபடி இயக்கம் 40 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
12. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் 2020-2023ஆம் ஆண்டில் பலா மதிப்பு கூட்டும் மையம் ரூபாய் 3.75 கோடி செலவில் அமைக்கப்படும்.
13. வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களை சிறு தானியம் பயறு வகை பயிர்களை அறுவடை செய்வதற்கு ஏதுவாக 2022-2023ஆம் ஆண்டில் 18 லட்சம் ரூபாய் செலவில் 25 சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்கள் மாற்றி வடிவமைக்கப்படும்.
14. வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள இயந்திரங்களின் பயன்பாட்டினை கண்காணிக்க 2022-2023ஆம் ஆண்டில் புவியியல் தகவல் நிலையை அறியும் ஐபிஎஸ் கருவிகள் 44 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்படும்.
15. நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 2023-2023ஆம் ஆண்டில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல் விளக்கங்கள் பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்படும்.
இதையும் படிங்க: 'இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் கிடைக்கும்' - அமைச்சர் நாசர் அறிவிப்பு