ETV Bharat / state

என்.ஆர்.சி. குறித்து அமித் ஷாவின் விளக்கம்: டி.கே. ரங்கராஜன், வைகைச்செல்வன், மாலன் சிறப்புப் பேட்டி! - என்சிஆர் பற்றி டி.கே. ரங்கராஜன் கருத்து

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த அமித் ஷா விளக்கம் பற்றி பல்வேறு கட்சியினரும் பத்திரிகையாளரும் தங்களது கருத்தை நமது ஈடிவி பாரத்துடன் பகிர்ந்துகொண்டார்.

mp-tk-rengarjan-reaction-on-amith-shahs-remarks

author img

By

Published : Dec 24, 2019, 9:41 PM IST

Updated : Dec 24, 2019, 11:45 PM IST

2021 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் நடத்த மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கியுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடத்துவதற்கான முன்னோட்டம் என்றும், குடியுரிமைச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டும் சேர்ந்து நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக அமையும் எனவும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் என்.பி.ஆர். என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், என்.ஆர்.சி. எனப்படும் குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், மூத்த பத்திரிகையாளர் மாலன் உள்ளிட்டோர் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டி.கே. ரங்கராஜன், ''பொதுவாக மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும்போது எதிர்க்கட்சிகள் ஏராளமான கேள்விகள் கேட்பர். நாங்கள் இந்த மக்கள்தொகை முறையை ஏற்கவில்லை.

இந்தப் புதிய மக்கள்தொகை தொடர்பாக மக்களுக்கு எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது. மத்திய அரசு இது தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த வேண்டும், அனைத்து கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். இல்லையென்றால் உடனடியாக அவரச நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். இது ஆர்.எஸ்.எஸ்.இன் திட்டம். எனவே இதனை ஏற்க முடியாது'' என்று கூறினார்.

டி.கே. ரங்கராஜன்
டி.கே. ரங்கராஜன்

இது குறித்து வைகைச்செல்வன் கூறுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமிய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் இதை பூதாகர பிரச்னையாக மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் தான் உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தச் சட்டத்தை தெளிவுப்படுத்தி பார்க்க வேண்டும்.

அதிமுக தனது கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. மற்றபடி தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும் இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். இஸ்லாமிய மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம்.

அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன்
அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன்
கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர். ஆனால் இந்தச் சட்டம் குறித்து உண்மை நிலையை அறிந்து பரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதச்சார்பற்ற முறையைத்தான் நாங்கள் கையாளுகிறோம்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் எந்தவித சட்டச் சிக்கலும் வராது என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாக்களித்தோம். தேசிய குடியுரிமைப் பதிவேடு தற்போது நடைமுறைப்படுத்தவில்லை என்றுதான் அமித் ஷா கூறியுள்ளார். அதனால் அது குறித்து நன்கு தெரிந்த பின்னர் பேசினால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதேபோல் மாலன் கூறுகையில், "என்பிஆர் என்பது தேசிய மக்கள்தொகை பதிவேடு. இது வழக்கமான நடைமுறைதான். ஏற்கனவே 2011ஆம் ஆண்டு கணக்கெடுக்கப்பட்டது. மீண்டும் 2020 - 21ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அரசை எதிர்க்கட்சிகள் ஒரு சந்தேகக் கண்ணோடு பார்க்கக்கூடிய சூழ்நிலையில் இது தேவையில்லை. இதை ஒரு சில மாதங்கள் தள்ளிப்போட்டிருக்கலாம்.

என்.பி.ஆர்.க்கும் என்.ஆர்.சி.க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. 1971 முதல் வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறியுள்ளனர். இவ்வாறு குடியேறி உள்ளவர்களுக்கும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும் பிரித்துக் காட்டுவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டது. அஸ்ஸாமில் உள்ள என்.ஆர்.சி.க்கும் மற்ற பகுதியில் உள்ள என்.ஆர்.சி.க்கும் அர்த்தம் வேறு.

மூத்த பத்திரிகையாளர் மாலன்
மூத்த பத்திரிகையாளர் மாலன்
இந்தியாவுக்கு குடியுரிமை திருத்தச்சட்டம் தேவை. ஆனால் தேசிய குடியுரிமை பதிவேடு தேவையில்லை என்பது எனது கருத்து. ஏற்கனவே ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவற்றை நாம் வைத்துள்ளோம். ஒரு இந்திய குடிமகன் என்பதை அடையாளப்படுத்த தேவையான அனைத்தும் நம்மிடம் உள்ளது. எனவே நான் ஒரு இந்தியன் என்பதை அடையாளப்படுத்த வேறு ஏதும் தேவையில்லை.

எனவே இந்த நேரத்தில் என்.ஆர்.சி. என்பது தேவையில்லை. குடியுரிமை திருத்தச்சட்டம் அவர்கள் இந்தியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளதா? இல்லையா? என்பதை அது தெளிவுபடுத்தும். வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களுக்கு ஒரு சட்டம் தேவை என்பதால் இந்தக் குடியுரிமை திருத்தச்சட்டம் அவசியம். ஆனால் என்.ஆர்.சி. என்பது தேவையில்லை. இலங்கை தமிழர்கள் மத ரீதியான ஒடுக்குமுறை காரணங்களால் இந்தியா வரவில்லை.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவாக இருக்கும்போதே திமுக எம்.பி. திருச்சி சிவா இன ரீதியாக ஒடுக்குமுறை என்பதையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது ஒரு மத ரீதியான திருத்தம் மட்டுமே தவிர, இன ரீதியான திருத்தம் அல்ல.

மேலும் இலங்கையில் தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை பெறுவது என்பது அவர்களது நோக்கத்திற்கு எதிரானதாக ஆகிவிடும். இதுபற்றி இலங்கை அரசு இலங்கை, தமிழர்கள் தாங்கள் இந்தியர்கள் அல்ல என்றும் இலங்கையின் பூர்வ குடிமக்கள் என்றும் எனவே இலங்கையில் தங்களுக்கு சம உரிமை வேண்டும் என்றும் போராடுவதாக கூறியுள்ளது. எனவே இலங்கை தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமைப் பெற்றுவிட்டால் அவர்களது போராட்டம் வலிமையற்றதாக ஆகிவிடும்.

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் குடியேறும் நிலை ஏற்பட்டுவிட்டால் அங்குள்ள சிங்களர்கள் தமிழர்களைக் கொடுமைப்படுத்தி இந்தியாவுக்கு அனுப்ப முயற்சி செய்வார்கள். ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை என்பது அவர்களின் இலங்கை வாக்குரிமையைப் பறிக்கும்.

எனவே அவர்களுக்கு என்று 'அகதி கடவுச்சீட்டு' (refugee passport) கொடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் இலங்கைத் தமிழர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களை பார்த்துவிட்டு வர உபயோகமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது என்பது அவர்களது அடிப்படை போராட்டத்தை பலவீனப்படுத்தும்.

தமிழ்நாட்டில் தற்போது நடந்துவரும் போராட்டங்கள் உண்மை சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் நடப்பவை. இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய குடியுரிமைப் பெற்ற எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, எந்தவிதமான பாதிப்பும் இதில் இல்லை. இதுபற்றி அந்தச் சட்டத்திலேயே உள்ளது. இதில் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு உள்ளது போல காட்டி ஒரு அச்சத்தை பரப்பி இந்தப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: என்.ஆர்.சி. யால் யாருடைய குடியுரிமையும் ரத்து செய்யப்பட மாட்டாது: அமித் ஷா!

Intro:Body:
2021 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும் நடத்த மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கியுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடத்துவதற்கான முன்னோட்டம் என்றும், குடியுரிமைச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டும் சேர்ந்து நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக அமையும் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் என்பிஆர் என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்-

பொதுவாக சென்செக்ஸ் எடுக்கும்போது எதிர்க்கட்சிகள் ஏராளமான கேள்விகள் கேட்பர். நாங்கள் இந்த சென்செக்ஸ் முறையை ஏற்கவில்லை. இந்த புதிய சென்செக்ஸ் தொடர்பாக மக்களுக்கு எந்தவித குழப்பமும் இருக்கக்கூடாது. மத்திய அரசு இது தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த வேண்டும், அனைத்து கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். இல்லையென்றால் உடனடியாக அவரச நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். இது ஆர்எஸ்எஸின் திட்டம் இதனை ஏற்க முடியாது. என்று கூறினார். Conclusion:use file photo
Last Updated : Dec 24, 2019, 11:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.