ETV Bharat / state

முன்களப் பணியாளர்களுக்கு காப்பீடு: ஹர்ஷ் வர்த்தனுக்கு நன்றி!

author img

By

Published : Apr 21, 2021, 1:59 PM IST

கரோனா முன்களப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிற வகையில் புதுப்பிக்கப்படுவதாக அறிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனுக்கு மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

எம்.பி.சு.வெங்கடேசன்  எம்.பி.சு.வெங்கடேசன் அறிக்கை  மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தனுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.  மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன்  MP Venkatesan  MP Venkatesan Report  MP S.Venkatesan thanked Union Minister Harsha Vardhan
MP S.Venkatesan thanked Union Minister Harsha Vardhan

இது குறித்து சு. வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா முன்களப் பணியாளர்களுக்கான 50 லட்சம் ரூபாய் காப்பீடு புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அத்திட்டம் நீட்டிக்கப்பட ஆவன செய்யுமாறு நேற்று (ஏப். 20) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

இன்று (ஏப். 21) கரோனா முன்களப் பணியாளர்க்கான காப்பீட்டுத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிற வகையில் புதுப்பிக்கப்படுவதாக நல்ல செய்தி வந்துள்ளது.

எம்.பி.சு.வெங்கடேசன்  எம்.பி.சு.வெங்கடேசன் அறிக்கை  மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தனுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.  மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன்  MP Venkatesan  MP Venkatesan Report  MP S.Venkatesan thanked Union Minister Harsha Vardhan
காப்பீட்டு நிறுவனத்தின் அறிவிப்பு

இதற்கு மத்திய அமைச்சருக்கு நன்றி. ஆனால் இரண்டு கேள்விகள் எஞ்சி இருக்கின்றன. ஒன்று, இதற்கான காப்பீடு மார்ச் 24ஆம் தேதி முடிவடைந்துவிட்டது. அன்றைய நாள் நள்ளிரவு வரை உயிரிழந்தவர்களுக்கான காப்பீட்டிற்கான விண்ணப்பம், ஆவணங்கள் 24ஆம் தேதிக்குள்ளாக வரப்பெற்று உரிமம் பட்டுவாடா செய்யப்படும். இதுவே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் தெரிவிப்பது.

சுகாதாரத் துறை அமைச்சகம் ட்வீட்

ஆனால், அமைச்சகத்தின் ட்விட்டர் செய்தி ஏப்ரல் 24ஆம் தேதி வரை இத்திட்டத்தின்கீழ் நீட்டிக்கப்பட்டிருப்பது போன்ற பொருள் தருகிறது. ஆனால், அதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளனவா, காப்பீட்டு நிறுவனத்தின் இசைவு பெறப்பட்டுள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

ஏப்ரல் 24ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் தொடங்கி இன்றுவரை உயிரிழந்துள்ளவர்களுக்கான காப்பீட்டின் கதி என்ன? ஒரு முன்களப் பணியாளர்க்கு கூட காப்பீடு பயன் கிடைக்காமல் போய்விடக் கூடாது.

சு. வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கை

அரசு அதற்கான விளக்கத்தை அளிக்கக் கோரி இன்று (ஏப். 21) மீண்டும் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒரு வேளை காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கான உரிமம் கிடைக்காவிடில் பி.எம் கேர் நிதி உடனடியாகப் பயன்படுத்த வேண்டும்.

கரோனா போராளிகளின் குடும்பம் பரிதவிக்கிற நிலைமை வரக் கூடாது. சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி கரோனா எதிர்ப்பு களத்தில் அரும் பணியாற்றுபவர்கள் எல்லோரும் காப்பீட்டுப் பயன் பெறுகிற வகையில் புதுப்பிக்கப்படுகிற திட்டம் இருக்க வேண்டும். அமைச்சரின் பதிலை எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.