ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள்; ஐஐடி மெட்ராஸால் நிகழ்ந்த நன்மை

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளை ஐஐடி மெட்ராஸின் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் neomotion assistive solutions private limited உலகளாவிய வாகன உதிரிபாக நிறுவனமான MOBIS உடன் இணைந்து வழங்கியுள்ளது.

மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள்

author img

By

Published : Dec 14, 2022, 10:43 PM IST

சென்னை: ஐஐடி மெட்ராஸின் neomotion assistive solutions private limited ஸ்டார்ட்அப் நிறுவனம், மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயணம் பெறும் வகையில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது. இந்த கருவி ஒவ்வொருவரது உடல் அமைப்புக்கு ஏற்றபடி பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை 500 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் முயற்சியில், உலகளாவிய வாகன உதிரிபாக நிறுவனமான MOBIS, ஐஐடி மெட்ராஸின் neomotion assistive solutions private limited ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் வழங்கல்

"NeoFly" என்று அழைக்கப்படும், சக்கர நாற்காலிகள் பயனாளியின் மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறகு சரியான பொருத்தம் மற்றும் சரியான தோரணையை ஆய்வு செய்துபின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள MOBIS ஆலையில் 50 பயனாளிகளுக்கு இந்த மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

"நியோபோல்ட்" எனப்படும் ஸ்கூட்டர் கிளிப்-ஆன் சாதனம், சக்கர நாற்காலிகளை சாலையில் இயக்க உதவும். இந்த கருவி மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைத் தொடரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நன்கொடை முகாம்கள் மூலம் வழங்கப்படும் சக்கர நாற்காலிகள் பயனற்றதாக இருப்பதாலும், அவை பயனாளிகளுக்கு முதுகுவலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற பக்கவிளைவை வழிவகுப்பதாலும், இந்த கருவி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கருவியின் தனித்துவமான அம்சங்கள் குறித்து MOBIS-ன் மனிதவளத் தலைவர் பிரேம் சாய் கூறுகையில், “மருத்துவ ஆதரவின் ஒரு பகுதியாக, இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, ஹரியானா, ஹைதராபாத், மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக 500 மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன” என்றார்.

MOBIS ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், neomotion assistive solutions private limited தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வோஸ்டிக் சௌரவ் டாஷ் பேசியதாவது, “எங்கள் தயாரிப்பினை பயனாளிகளிடம் இலவசமாக கொண்டு சேர்க்கும் விதமாக, ஸ்பான்சர் செய்ய MOBISஐ அணுகினோம். அவர்கள் எங்களுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்” என்றார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி: குரூப்-1சி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.