ETV Bharat / state

'தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்குள் 540 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படும்'

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்குள் 540 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்குள் 540 மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்

author img

By

Published : Nov 10, 2022, 8:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்குள் 540 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படும் எனவும்; சென்னை புறநகர்ப் பகுதியில் 100% கால்வாய் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கே.கே. நகர், அசோக் நகர், வடபழனி, சூளைமேடு உள்ளிட்டப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக மழைநீர் வடிகால் பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுமேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, 'கே.கே. நகர், அசோக் நகர்ப் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் 800 மீட்டர் தூரத்திற்கு 5.50 கோடி ரூபாயில் பணிகள் முடிவடைந்துள்ளன. கனமழை பெய்தாலும் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.

வடபழனி-பெரியார் பாதையில் கடந்த ஆட்சிக்காலத்தில் மழை நீர் அதிகமாக தேங்கி இருக்கும். ஆனால், தற்போது அரும்பாக்கம் கால்வாய்யைத் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளதால் சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்கும். அதற்கான பணிகளும் நடைப்பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 1280 தரைப்பாலங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் மேம்பாலங்களாக மாற்றி அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார். அடுத்த ஆண்டுக்குள் 540 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படும். இனி, தமிழ்நாட்டில் தரைப்பாலங்களே இருக்காது‌. அவை அனைத்தும் மேம்பாலங்களாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது’ எனப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் 100% கால்வாய் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசைக்கண்டித்து பாஜக எம்எல்ஏ உண்ணாவிரதப்போராட்டம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.