ETV Bharat / state

திமுகவில் ஐக்கியமான 350 நாதக உறுப்பினர்கள் - திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி

நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் 350-க்கும் மேற்பட்டோர் இன்று அக்கட்சியிலிருந்து விலகி ராஜீவ் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

more than 350 ntk cadres join dmk
more than 350 ntk cadres join dmk
author img

By

Published : Feb 16, 2021, 6:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்காவிடினும், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களது பலத்தை நிரூபிக்க அனைத்து வழிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாய்ப்பினை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பலர் முன்வருகின்றனர்.

இதனால், பலர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக யூகிக்கப்படும் கட்சிகளில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார் ராஜீவ் காந்தி. அவருக்கு திமுகவில் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, கட்சிப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வரும் அவர், இன்று நாம் தமிழர் கட்சியில் தனக்கு ஆதரவாக இருந்த சுமார் 350 பேரை அக்கட்சியிலிருந்து விலக்கி, திமுகவில் இணைத்துள்ளார்.

இவர்களில் பலர் நாம் தமிழர் கட்சியில் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உறுப்பினர் அட்டை வழங்கி கட்சிக்கு வரவேற்றார்.

திமுகவில் ஐக்கியமான 350 தம்பிகள்

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.