ETV Bharat / state

கோடம்பாக்கம்: 20 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு - கரோனா உயிரிழப்பு விகிதம்

சென்னை: கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Kodambakkam Corona update
Kodambakkam Corona update
author img

By

Published : Oct 11, 2020, 1:48 PM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்தப் பரவலை குறைக்க அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேபோல் அண்ணா நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் நெருங்குகிறது.

மேலும், சிகிச்சைப்பெற்று வருபவர்களின் விழுக்காடு 7இல் இருந்து 8ஆக உயர்ந்துள்ளது. தினமும் 1000திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வந்தாலும் குணமடைந்தோரின் விழுக்காடு 91ஆக உள்ளது,

இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 751 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 778 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 577 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், சென்னையில் இதுவரை 3 ஆயிரத்து 396 பேர் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மண்டலவாரியான பாதிக்கப்பட்டவரின் பட்டியல்:

கோடம்பாக்கம் - 20018 பேர்

அண்ணா நகர் - 19995 பேர்

ராயபுரம் - 16762 பேர்

தேனாம்பேட்டை - 17300 பேர்

தண்டையார்பேட்டை - 14533 பேர்

திரு.வி.க. நகர் - 13992 பேர்

அடையாறு - 14132 பேர்

வளசரவாக்கம் - 11761 பேர்

அம்பத்தூர் - 12793 பேர்

திருவொற்றியூர் - 5548 பேர்

மாதவரம் - 6557 பேர்

ஆலந்தூர் - 7335 பேர்.

சோழிங்கநல்லூர் - 5018 பேர்

பெருங்குடி - 6436 பேர்

மணலி - 2854 பேர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.