சென்னை: ஆகஸ்ட் 13ஆம் தேதி மாலை 5.30 மணி வரை, பிஇ,பிடெக் படிப்பில் சேர்வதற்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 119 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெருந்தொற்று காரணாக இந்த ஆண்டும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடந்து நடப்பு கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மாணவக்கள் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, பொறியியில் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர ஆக., 13ஆம் தேதி மாலை 5.30 மணி வரையில், பொறியியல் கலந்தாய்விற்காக 1 லட்சத்து 46 ஆயிரத்து 119 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 13 ஆயிரத்து 181 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 94 ஆயிரத்து 921 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பொறியியல் சார்நிலை பணித் தேர்வுக்கான தேதி அறிவிப்பு