ETV Bharat / state

மதுரை - சென்னை இடையே அதிகரிக்கும் விமான சேவை! - flight increased to madurai

சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து மதுரை, கொச்சி, கோவா ஆகிய நகரங்களுக்கு இன்று முதல் கூடுதலாக விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு இரண்டு விமானங்களும், கொச்சி, கோவா நகரங்களுக்கு தலா இரண்டு விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

chennai to madurai flights
chennai to madurai flights
author img

By

Published : Jul 10, 2023, 4:53 PM IST

சென்னை: மதுரைக்கும் சென்னைக்கும் இடையே தினமும் 6 விமானங்களும், அதைப் போல் மறுமார்கமாக மதுரையிலிருந்து சென்னைக்கு தினமும் 6 விமானங்கள் என்று, சென்னை-மதுரை-சென்னை இடையே ஒரு நாளுக்கு இதுவரையில் 12 விமான சேவைகள் மட்டுமே, இயக்கப்பட்டு வந்தன.

ஆனால், இன்றிலிருந்து கூடுதலாக சென்னை-மதுரை வழித் தடத்தில் கூடுதலாக 2 விமான சேவைகளும், அதேபோல் மதுரை-சென்னை வழித்தடத்தில் 2 விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இனி சென்னை-மதுரை-சென்னை இடையே தினமும் 16 விமான சேவைகள் இயக்கப்படும். மதுரைக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், கொச்சிக்கு இதுவரை தினமும், 4 விமான சேவைகளும் அதைப்போல் மறுமார்க்கமாக கொச்சி-சென்னை இடையே 4 விமான சேவைகளும் மொத்தம் 8 விமான சேவைகளும் இயக்கப்பட்டு வந்தன. இன்றிலிருந்து சென்னை-கொச்சி இடையே கூடுதலாக விமான சேவையை அதிகரிக்கப்பட்டு, சென்னை-கொச்சி-சென்னை வழித்தடத்தில் மொத்தம் 10 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. கொச்சிக்கு விமான சேவையை அதிகரித்துள்ளது கேரள மாநில மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய இடங்களுள் ஒன்றான கோவாவிற்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து இதுவரை காலை ஒரு விமானம், மாலை ஒரு விமானம் என 2 விமான சேவைகள் மட்டும் இருந்தது. அதைப்போல் மறுமார்க்கமாக கோவாவில் இருந்து சென்னை வருவதற்கும் தினமும் 2 விமான சேவைகளும் மட்டுமே இருந்தது.

தற்போது கோவா செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, இன்றிலிருந்து மதியம் 1:50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவாவிற்கு கூடுதலாக ஒரு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதைப்போல் அந்த விமானம், மாலை 6:55 மணிக்கு கோவாவில் இருந்து சென்னை வந்து சேர்கிறது.

இதை அடுத்து இன்றிலிருந்து சென்னை-கோவா இடையே 3 விமானங்களும், கோவா-சென்னை இடையே 3 விமானங்களும், நாள் ஒன்றுக்கு சென்னை-கோவா- சென்னை வழித்தடத்தில் 6 விமானங்களும் இயக்கப்படுகின்றன. கோவாவிற்கு விமான சேவை அதிகரித்துள்ளது சுற்றுலாப் பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அண்மையில் சென்னை விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட, புதிய முனையத்தில் இருந்து கூடுதலாக சர்வதேச விமான சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடிய விரைவில் சென்னை விமான நிலையத்தின் பழைய முனையத்தை மறு சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு:அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமான பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.