ETV Bharat / state

ஹைடெக் முறையில் வழக்கு சொத்துக்கள் கண்காணிப்பு: QR முறையை அறிமுகம் செய்த சென்னை காவல்துறை! - சென்னை நீதிமன்றம்

மத்திய குற்றப்பிரிவில் உள்ள 403 வழக்குகளில் 2925 விலையுயர்ந்த வழக்கு சொத்துக்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதால், அதை பராமரிக்க பாதுகாப்பு பெட்டக அறையில் QR Code உடன் வழக்கு சொத்துக்கள் மென்பொருள் மயமாக்கப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 19, 2023, 4:16 PM IST

சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவில் புலன் விசாரணையின் போது கைப்பற்றப்படும் வழக்கு சொத்துக்களைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள (மல்கானா) பாதுகாப்பு பெட்டக அறையில் கடந்த 31.08.2019 முதல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. இது வழக்கு சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரையிலான இடைப்பட்ட காலத்திலும், நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின் மீண்டும் புலன் விசாரணையின் அதிகாரியின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் வரை வழக்கின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுவரும்.

இந்நிலையில்,அதன் சாட்சிய மதிப்பு மாறாமலிருக்கும் வகையில், அச்சொத்துக்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடித்து வைக்கும் வரையில் (மல்கானா) பாதுகாப்பு பெட்டக அறையில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இப்பொழுது, இந்த பாதுகாப்பு பெட்டக அறையில் 403 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 44 வகையான விலையுயர்ந்த பொருட்கள், ஆவணங்கள் உட்பட 2925 வழக்கு சொத்துக்கள் வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பெட்டக அறையில் அதிக அளவிலான சாட்சிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுப் பாதுகாக்கப்படுவதாலும், புலன் விசாரணை அதிகாரிகள் மாறி புதிய புலன் விசாரணை அதிகாரிகள் பொறுப்பு மாறுகின்றன.இதனை நீண்ட காலமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதால் அவற்றை அந்த சொத்துக்கள் வழக்கு எண் வரிசையில் அடையாளம் காணுதல் மற்றும் சொத்துக்கள் புலன் விசாரணை அதிகாரியின் பொறுப்பில் உள்ளதா அல்லது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறதா என்று தெரியவேண்டும்.

அப்படியெனில், யாரால்? எப்போது? போன்ற விவரங்கள் மற்றும் வழக்கு சொத்துக்கள் அடிக்கடி நீதிமன்றத்திற்கும் எடுத்துச் சென்று திரும்பக் கொண்டு வந்து ஒப்படைக்கப்படுவது போன்ற பல காரணங்களாலும் இதை முறையாகப் பராமரித்தல் பெரும் சவாலாகவே சென்னை காவல்துறைக்கு இருந்துள்ளது.

இதை தொடர்ந்து, சவாலைச் சரி செய்ய வழக்கு சொத்துக்களைப் பதிவேடுகள் கொண்டு பராமரிப்பதைத் தவிர்க்கவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் QR code வடிவத்துடன் பாதுகாப்பு பெட்டக அறையின் ஆவணங்களைப் பராமரிக்க மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால், ஒவ்வொரு வழக்கு சொத்தினையும் அடையாளம் காணும் வகையில் தனிப்பட்ட QR code வழங்கப்பட்டு அதனை உரியப் பாதுகாப்புடன் எளிதில் கையாள முடியும்.வழக்கு சொத்து புலன் விசாரணை அதிகாரி, பாதுகாப்பு பெட்டகம் மற்றும் நீதிமன்றம் ஆகியோரில் யாருடைய பொறுப்பில் உள்ளது என்று சங்கிலித் தொடர் போன்று கண்காணிக்க இயலும்.

இந்த மென்பொருள் அமைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வழக்கு சொத்தினை அந்த பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து வெளியே எடுத்து அதன் சீலை அகற்றிப் பார்க்காமல் அதன் வடிவத்தினையும், வகையையும் படத்தின் மூலம் பார்வையிட முடியும். தேவைப்படும் தகவல்களை அதன் தன்மைக்கேற்ப பல்வேறு வகையான படிவங்களில் உருவாக்க முடியும். வழக்கு சொத்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வருவது போன்றவற்றை இந்த மென்பொருள் மூலம் முறையாகவும் மற்றும் எளிமையாகவும் கண்காணிக்க முடியும் எனச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வேலூரில் 11 சவரன் நகைகளைத் திருடி உருக்கிய 2 பெண்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.