சென்னை: ஆவடி அடுத்த மிட்டண மல்லி பகுதியை சேர்ந்தவர் யூடியூபர் கார்த்தி கோபிநாத், இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை புனரமைப்பதாக கூறி பல லட்சங்களை வசூல் செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் அறநிலையத்துறை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் யூடியூபர் கார்த்தி கோபிநாத்-ஐ மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத்-ஐ ஜாமினில் விடுவிக்க கோரி அவரது சார்பில் வக்கீல்கள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அப்போது, கார்த்திக் கோபிநாத்-ஐ போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, யூடியூபர் கார்த்தி கோபிநாத் ஜாமின் மனு மீதான விசாரணையை நிறுத்தி வைப்பதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்த பிணை மனு மீதான விசாரணை நாளை (ஜூன்.2) அல்லது நாளை மறுநாள் வரலாம் எனத் தகவல் வெளியானது.
இதையும் படிங்க: வேலை வாங்கி தருவதாக மோசடி: “ஆள வச்சி தூக்கிடுவேன்" - அதிர்ச்சி ஆடியோ