ETV Bharat / state

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கே.சி.வீரமணி வீட்டில் பணம், நகை, ஆவணங்கள் பறிமுதல் - முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் பணம், நகை, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ரூ.35 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல்
ரூ.35 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல்
author img

By

Published : Sep 16, 2021, 8:27 PM IST

Updated : Sep 17, 2021, 6:46 PM IST

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை என 5 துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தபோது கே.சி.வீரமணி, வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து திமுக ஆட்சியமைத்த உடன் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது.

நகை, டாலர் பறிமுதல்
நகை, டாலர் பறிமுதல்

இதைத்தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.16) ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சொகுசு கார்கள் பறிமுதல்
சொகுசு கார்கள் பறிமுதல்

இந்த சோதனையின் முடிவில், ரூ.34 லட்சத்து ஆயிரத்து 60 ரொக்கம், ரூ.1.80 லட்சம் மதிப்பிலான டாலர், 9 சொகுசு கார்கள், 4 ஆயிரத்து 987 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருள்கள், முக்கிய சொத்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி அவரது வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மணல் குவிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: நல்ல நேரம் போஸ்ட் - துரைமுருகன் மகனுக்கு கெட்ட நேரம்

Last Updated : Sep 17, 2021, 6:46 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.