ETV Bharat / state

மக்கள் நீதி மய்யம் கட்சி தோ்தல் பரப்புரை அட்டவணையில் மாற்றம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கோவையில் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யபட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற செல்வதால் இன்று நடைபெறவிருந்த தேர்தல் பரப்புரை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

File pic
author img

By

Published : Mar 29, 2019, 9:19 AM IST

இது குறித்து மக்கள் நீதிமய்யம்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோவையில் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யபட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கோவை செல்லவிருக்கிறார்.

சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதில் பிரச்சனை நிலவிவரும் நிலையில் இந்த வழக்கில், மக்கள் நீதிமய்யம்கட்சி நேரிடையாக தலையிட்டு அந்த வழக்கை தங்கள் கையில் எடுத்து நடத்துவதற்கானமுயற்சியில்மக்கள் நீதிமய்யம்ஈடுபடும். கோவைக்கு செல்லும் கமல்ஹாசன் இன்று மாலையே சென்னை திரும்புவார்.

கமல்ஹாசன் கோவை செல்வதால்இன்று நடைபெற இருந்த தேர்தல் பரப்புரை அட்டவணையில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்தல் பரப்புரை அட்டவணையில் மாற்றம் இருக்கும்.

விரைவில் தேர்தல் பரப்புரை அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MNM
Logo

சென்னையில் நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தேர்தல் பிரச்சாரத்தில் திடீர் மாற்றம்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று முதல் தேர்தல் பிரச்சாரம் துவங்கப்பட்டு  இன்று மத்திய சென்னை மற்றும் வட சென்னையில் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , இன்று திடீரென்று இந்த திட்டத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று  காலை 8 மணி முதல் மத்திய சென்னை க்கு உட்பட்ட டிபி சத்திரம் அமைந்தக்கரை எம் எம் டி ஏ கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் பிற்பகல் முதல் சென்னை க்கு உட்பட்ட  வில்லிவாக்கம் அம்பத்தூர் எண்ணூர் உள்ளிட்ட தொகுதிகளில்  பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்த திட்டங்கள் மாற்றி  அமைக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில்  கோவையில் 7-வயதுடைய சிறுமி கொடூரமாக கற்பழித்த கொலை பட்டுள்ளார் அந்தப் பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று கோவை செல்ல இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த திடீர் மாற்றம் என்று கூறப்படுகிறது.  

 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதில் பிரச்சனை நிலவி வரும் நிலையில் இந்த வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி நேரிடையாக தலையிட்டு அந்த வழக்கை தங்கள் கையில் எடுத்து நடத்துவதற்கான  முயற்சியில்  மக்கள் நீதி மய்யம் ஈடுபடப்போவதாக  கூறப்படுகிறது.

 இதற்காக இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கோவைக்கு செய்கிறார் கோவைக்கு புறப்படும் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை கோவைக்கு செல்லும் கமலஹாசன் இன்று மாலையே சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இறுதி நேரத்தில் தேர்தல் பிரச்சார அட்டவணையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்தல் பிரசார அட்டவணையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 31 ஆம் தேதி பாண்டிச்சேரியில் பிரச்சாரம் நடைபெறும் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாக சென்னையில் பிரச்சாரம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் மீண்டும் தேர்தல் பிரச்சார அட்டவணை மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.