சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று (செப்.28) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 28, 2023
">— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 28, 2023
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை (செப்.29 ஆம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி!
மேலும், செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 04ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சிலப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும், ஆரணியில் 9 சென்டி மீட்டர் மழையும், செங்கல்பட்டு, வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் 7 சென்ட் மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை மையம்