சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் மெயின்ரோட்டில் அர்ஜீன் (26) என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று ( ஏப்ரல் 9) இரவு, வழக்கம் போல் கடையை பூட்டி வி்ட்டு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 10) காலை அர்ஜீன் கடைக்கு சென்ற போது, ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் இருந்த ரூ. 75 ஆயிரம், செல்போன்கள் கொள்ளை போனது தெரியவந்தது. கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அரஜுன் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் பதிவுகள் மூலம் மதுரவாயல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளில், இருசக்கர வாகனத்தில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வருவதும், அதில் ஒருவர் கடப்பரையுடன் பூட்டை உடப்பதும், அதற்கு முன் சிசிடிவி காமிரா இணைப்பை துண்டிப்பதும் பதிவாகியுள்ளது.