சென்னை போரூரில் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்திவருபவர் முஜிபுர் ரகுமான். இவர் நேற்று (ஜன. 10) வழக்கம்போல் வாடிக்கையாளர்களின் செல்போன்களைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, செல்போன் பேட்டரியைத் தனியாகப் பிரித்து மேசையில் வைத்துள்ளார்.
பின்னர், செல்போன் டிஸ்பிளேகளைத் துடைப்பதற்காகப் பயன்படுத்தும் தின்னரை, பேட்டரியின் மேலே தெளித்துள்ளார். மேலும், அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் ஸ்பேனரை வைத்து தெரியாதவிதமாகப் பேட்டரியைத் தொட்டவுடன் பேட்டரி வெடித்தது.
திடீரென தீ விபத்து ஏற்படவே அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். இதையடுத்து, கடையின் உரிமையாளர் தீ எரிந்தபடி இருந்த பேட்டரியை கீழே தள்ளிவிட்டுத் தண்ணீர் ஊற்றி அணைத்தார். நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: எரிவாயு கசிவால் தீ விபத்து: நான்கு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!