ETV Bharat / state

வாக்காளர் அடையாள அட்டை விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட கமல் ஹாசன் - சிறப்பு முகாம்கள்

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையின் அவசியம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

kamal
kamal
author img

By

Published : Nov 20, 2020, 1:34 PM IST

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 16ஆம் தேதி 2021ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள் மூலமாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு-புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகள், நடைபெற்று வருகிறது. நவம்பர் 21,22 - டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வாக்காளர் அடையாள அட்டையின் அவசியம் குறித்தும், இந்த முகாம் குறித்தும் இளைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டை விழிப்புணர்வு வீடியோ

அதில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பிக்கவும், அடையாள அட்டையில் இருக்கும் பிழைகளைச் சரி செய்துகொள்ளவும், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அடையாள அட்டையை மாற்றிக்கொள்வதற்கும் தேர்தல் ஆணையம் வரும் நவம்பர் 21,22 - டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களே இல்லை எனும் நிலையை உருவாக்குவோம் என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.