சென்னை: வருகிற உள்ளாட்சித் தேர்தலுக்கான மாநிலத் தலைமைப் பணிக் குழு மற்றும் மாவட்ட வேட்பாளர் தேர்வுக் குழுவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ம.நீ.ம-வின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, தங்களது ஜனநாயகக் கடமையினைச் செவ்வனே தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர். கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகர்ப்புறத்திலும் ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த `ஏரியா சபை’ போன்ற அமைப்புகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம் என கமல்ஹாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாநிலத் தலைமைப்பணிக் குழு:
1. A.G.மெளரியா IPS., (ஓய்வு) - துணைத் தலைவர்
2. R.தங்கவேலு - துணைத் தலைவர்
3. ஶ்ரீபிரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்
4. சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர்
5. செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர்
6. சரத்பாபு ஏழுமலை - மாநிலச் செயலாளர்
இந்தக் குழு நடைபெற உள்ள 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய உதவியாக இருப்பார்கள் என ம.நீ.ம சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பொருநை - முதல் நாகரிகம் தமிழ் நாகரிகம் என்பதற்கான சாட்சி