குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் 23ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தவுள்ளனர். இதில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் பங்கேற்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் செளரிராஜன் பேசுகையில், ’இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பது தொடர்பாக எங்கள் கருத்துக்களை தெரிவித்தோம். இது தொடர்பாக விரிவாக எங்கள் கட்சி சார்பாக பத்திரிகை செய்தி வெளிவரும்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்குபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுடன் கை கோர்க்கும் கமல் ஹாசன்!