ETV Bharat / state

'என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன்‌' - கமல் ஆவேசம் - MNM Party Meeting IN chennai

சென்னை: என் நேர்மையை சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்‌ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மநீம மக்கள் நீதி மய்யம் மநீம ஆலோசனைக் கூட்டம் கமல்ஹாசன் MNM Party Meeting MNM Party Meeting IN chennai Kamal Hasaan
MNM Party Meeting IN chennai
author img

By

Published : May 11, 2021, 7:07 AM IST

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், தலைமை நிர்வாகிகளை சந்தித்து வந்த கமல்ஹாசன் நேற்று (மே.9) மாவட்ட செயலாளர்கள், மண்டல துணைச்செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகளை காணொலி காட்சி மூலம் சந்தித்து உரையாடினார்.

அப்போது கமல்ஹாசன் கூறுகையில், "மக்கள் நீதி மய்யம் எதன் காரணமாகவும் தன் பணியை நிறுத்தாது. முன்பை விட வேகமாக செயல்பட்டு மக்களின் ஆதரவைப் பெறுவோம். எனக்கு சோதனைகளும், விமர்சனங்களும் புதிதல்ல. என் நேர்மையைச் சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்.

கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கட்சியில் நான் கொண்டு வரும் சீர்திருத்தங்கள் கடுமையாக இருக்கும். இன்று விலகி நிற்கும் ஊடகங்கள், உண்மை உணர்ந்து நம்மை மீண்டும் தேடி வரும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேம்படுத்த ஐஐடி மெட்ராஸ் புதிய முன்னெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.