ETV Bharat / state

'மதம் இல்லை; சாமி இல்லை; நீங்கள் தான் எனக்கு சாமி' கமல்ஹாசன்!

ஓட்டுக்கு பணம் என்பது கொக்கியில் மாட்டியுள்ள புழுவுக்கு சமானம். அதை வீசி உங்களை பிடிக்கிறார்கள். அவர்கள் கை முழுவதுமாக கறை உள்ளது. எனவே உங்கள் விரல் முழுவதுமாக நீங்கள் கருக்க வேண்டும். விரலில் உள்ள சின்ன கறையின் மூலம் அவர்களின் கைகளில் உள்ள கறைகளை நீக்கலாம் என்று அம்பத்தூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

kamalhaasan speech
கமல்ஹாசன் பேச்சு
author img

By

Published : Mar 7, 2021, 10:41 AM IST

சென்னை: அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகரச் செயலாளர் எம். சந்தானம் ஏற்பாட்டில் அம்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே அக்கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது: உயிரே, உறவே, தமிழே. எனது கட்சி, தலைவர்கள் நிறைந்த கூட்டம். இந்தக் கூட்டம் இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு காரணம் எனது சகோதரர்கள்.

திமுக அகல வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்

மக்கள் நீதி மய்யம் என்ற குழந்தை கருவிலேயே கலைந்து விடும் என்று கூறினார்கள். திமுக தோன்றியது காலத்தின் கட்டாயம். இன்று அது அகல வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம். எம்.ஜி.ஆர். அண்ணா காலமாகிவிட்டதும் இவர்களின் கொள்கைகளும் காலாவதி ஆகிவிட்டது.

அரசியல் எனது தொழில் இல்லை. பேரில் எல்லோரும் நிதி என்று வைத்திருப்பதால் எங்கள் நிதியில் கை வைப்பது முறையல்ல.

ஓட்டு விற்பனைக்கு அல்ல

நான் வளர்ந்த சூழலில் காந்தியை பற்றியும் கடவுளை பற்றியும், காங்கிரஸை பற்றியும் தெரிந்துதான் வளர்ந்தேன். என்னுடைய தகப்பனும் காங்கிரஸார் தான். இவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் அது மக்கள் கையில் தான் உள்ளது. எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வீட்டு வாசலில் எழுதி போடுங்கள். இதைப் பார்த்து நாக்கை தொங்கப் போட்டு வர மாட்டார்கள். இப்போது கையில் உள்ளது டார்ச் லைட்தான்.

பெண்களுக்கு சிலிண்டர் ஆசை காட்டிவிட்டு விலையை குறைக்கவில்லை

பெட்ரோல் டீசல் விலைக்கு நாங்கள் பொறுப்பல்ல எனக் கூறுகின்றனர். சாலையில் டோல்கேட் போட்டு வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். சாலை மேம்பாட்டு வரி என வரி போட்டு கொண்டே இருக்கிறார்கள். மாநில அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் இதுவரை குறைக்கவில்லை.

புகையில் கஷ்டப்பட்ட பெண்களுக்கு சிலிண்டர் ஆசை காட்டியது நீங்கள்தான். தமிழைக் கற்று கொள்ளாமல் இருந்தோமே என வருத்தப்பட்ட ஒருவர் 30 நாள்களில் தமிழ் கற்றுக்கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு தற்போது 30 நாள்களே உள்ளது.

தமிழ்நாடு எங்கு வெற்றிநடைபோடுகிறது

தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது என்கிறார்கள். கூகுள் செய்து பார்த்தால், எத்தியோப்பியா நாட்டில்தான் தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது. ஊடகங்கள்தான் இந்த நாட்டின் தூண்கள். இந்தத் தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தாலும், அது வெற்றி கிடையாது. அதை எனது கடமையைச் செய்து முடிக்க எனக் கருதுகிறேன்.

பணக்காரர்களுக்குப் பின்னால் அரசு அண்டி பிழைக்கிறது. ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் போடும் ஓட்டுக்கு என்ன நிலைமை என்று எண்ணி பாருங்கள். மந்திரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் தமிழ்நாட்டை வளமாக வைத்துக்கொள்ளலாம். மாநிலத்தின் பொருளாதரத்தை 1 ட்ரில்லியன் மதிப்பு ஆக உயர்த்துவதுதான் வெற்றி.

துரோகம் செய்தவர்களுக்கு தலை வணங்க மாட்டேன்

ஸ்டாலின் நிற்கும் இடத்தில் வேட்பாளராகப் போட்டியிடமாட்டேன். கொஞ்சம் சுத்தமான இடத்தில் போட்டியிடுவேன். கமலுக்கு மதம் இல்லை சாமி இல்லை. நீங்கள்தான் எனக்கு சாமி. பக்தி இல்லை, பாசம் உண்டு, நேசம் உண்டு. நான் யாருக்கும் வணங்க மாட்டேன் என சொல்லுவது தவறு. உங்களுக்கு தலை வணங்குவேன். துரோகம் செய்பவர்களுக்குத் தலை வணங்க மாட்டேன்.

இது என் நாடு. என் காசு. பணம் வாங்கி கொண்டு ஓட்டை குத்தகைக்கு விடுகிறீர்கள். அவ்வாறு பணம் பெற்று வாக்கு அளித்தப்பின் அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது.

கறையை போக்க கை முழுக்க கருக்க வேண்டும்

ஓட்டுக்குப் பணம் என்பது கொக்கியில் மாட்டியுள்ள புழுவுக்கு சமானம். அதை வீசி உங்களை பிடிக்கிறார்கள். டார்ச் லைட்க்கு வாக்களியுங்கள். இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை விட இந்தக் கட்சி வரக்கூடாது என நினைத்து வீட்டில் இருக்கும் கூட்டம் அதிகம். நான் சாமானியன்.

அவர்கள் கை முழுவதுமாகக் கறை உள்ளது. எனவே உங்கள் விரல் முழுவதுமாக நீங்கள் கருக்க வேண்டும். விரலில் உள்ள சின்ன கறையின் மூலம் அவர்களின் கைகளில் உள்ள கறைகளை நீக்கலாம்.

நான் அடிப்படை தொண்டன்

தமிழ்நாடு மக்கள் கெட்டிக்காரர்கள், ஆனால் கொஞ்சம் ஏமாளிகள். ரெய்டு வரும் எனச் சொல்லி மத்திய அரசு குறித்து குறைவாகப் பேசுங்கள் எனக் கூறுவார்கள். அவை வயித்தெரிச்சலில் திட்டமிடப்பட்டு அனுப்பப்படுகிறது. நானே ரெய்டு செல்ல தயாராக உள்ளேன்.

நாங்கள் செல்லும் இடமெல்லாம் இப்படிப்பட்ட கூட்டம் வருவது தமிழுக்கு பெருமை, உண்மையான தமிழருக்கு பெருமை. நான் தலைவன் என்று சொல்வதை விட அடிப்படை தொண்டன் என்பதுதான் பெருமை.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இதையும் படிங்க: தொகுதி எண்ணிக்கை முதல் கூவத்தூர் சத்தியம்வரை: இன்றைய தேர்தல் சரவெடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.