தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் அட்டை சரிபார்க்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் நடக்கும் இந்த வாக்காளர் சரிபார்க்கும் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், தொகுதி மாற்றுதல், திருத்தம் உள்ளிட்டவை செய்து கொள்ளலாம்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநகராட்சி பள்ளிகளிலும் அதிமுக, திமுக,மக்கள் நீதி மையம் அமமுக நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்தநிலையில் தேனாம்பேட்டையில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் சிறப்பு முகாமில் மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என அக்கட்சியிந் தலைவர் கமல்ஹாசன் நேரில் பார்வையிட்டார். பிறகு அங்கிருந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் தனியார் கல்லூரிக்குச் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "நேர்மையான முறையில் தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்ற தெரிந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்தத் தேர்தலில் பல கூட்டணிகள் உருவாகலாம். பல கூட்டணிகள் உடையலாம் என்ற அவர், . முறையான அனுமதி கிடைத்தவுடன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடங்குவேன்" என்றார்.
மேலும், மனுநீதி தேவையற்றது என்று கூறியதற்கு 17ஆம் நூற்றாண்டின் அடிப்படையில் மருதநாயகம் படத்தில் எழுதிய பாடல் அது, புத்தகம் புழக்கத்தில் இருந்தது உண்மை. அவை தேவையில்லை என்பதும் மற்றொரு உண்மை எனக் கூறினார்.
இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டை விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட கமல் ஹாசன்