ETV Bharat / state

திராவிட கழகங்களுடன் கூட்டணி இல்லை - கமல்ஹாசன் - MNM leader Kamal haasan explain

சென்னை: வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட கழகங்களுடன் கூட்டணி இல்லை என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் விளக்கம்
கமல்ஹாசன் விளக்கம்
author img

By

Published : Nov 3, 2020, 7:12 PM IST

Updated : Nov 3, 2020, 10:12 PM IST

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (நவ. 03) அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் நிர்வாகிகள் உடன் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தேசிய கீதத்தில் திராவிடம் சொல் இருக்கும் வரைக்கும் திராவிடம் இருக்கும், அதை அழிக்க முடியாது. ஆனால் கழகங்கள் உடன் கூட்டணி இல்லை” எனத் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று (நவ. 02) முதல் நாளன்று பேசிய கமல்ஹாசன், “திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. மக்களுடன் தான் கூட்டணி" எனத் தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசன் விளக்கம்

இந்தக் கூட்டத்தில் மநீம மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலம் துணைச் செயலாளராக சினேக பிரியா மோகன் தாஸ் நியமிக்கப்பட்டார். சினேக பிரியா மோகன் தாஸ் என்பவர் உணவு வங்கி என்னும் தன்னார்வலர் நிறுவனத்தை நிறுவி மக்களுக்கு உதவு வந்தவர். இவர் கடந்த பெண்கள் தினத்தன்று பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கை 1 மணி நேரம் பயன்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனுடன் சினேக பிரியா மோகன் தாஸ்
கமல்ஹாசனுடன் சினேக பிரியா மோகன் தாஸ்

இதையும் படிங்க...உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடியா?

Last Updated : Nov 3, 2020, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.