சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம் செய்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதன்பின் ஈபிஎஸ் உள்பட அவர் தரப்பு எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அதோடு ஒரு நாள் சட்டப்பேரவையில் இருந்து ஈபிஎஸ் தரப்பு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஈபிஎஸ் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்தது. ஆனால் காவல்துறை தரப்பில் தர்ணா போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடர் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கருப்பு உடை அணிந்தவாறு ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று (அக். 19) தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்களை அனைவரையும் ராஜரத்தினம் மைதானத்தில் வைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஈபிஎஸ் தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு