ETV Bharat / state

’இந்தி படித்துவிட்டா ஆலுமா டோலுமா’ போன்ற பாடலின் அர்த்தம் தேட முடியும் ’ - நயினார் நாகேந்திரன் கேள்வி - mla nayinar nagendrans assembly speech about new tamil songs

இந்தி படித்துவிட்டா ’ஆலுமா டோலுமா’ போன்ற பாடல் வரிகளின் அர்த்தம் தெரிந்து கொள்ள முடியும் ’ என பாஜக எம்.எல்.ஏ., நயினார் நகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

’பெண்களின் உடலில் உடை எங்கே என்று தேட வேண்டியிருக்கிறது’ - நயினார் நாகேந்திரன்

author img

By

Published : Apr 20, 2022, 6:47 AM IST

சென்னை: சட்டப்பேரவையில் தொழிற்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், பள்ளியை முடிக்கும் போது மாணவர்களிடம் என்ன திறன் உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

தன் மனைவிக்கு ஒரு சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு ரூ.1,700-ஐ கட்டணமாக வாங்கிவிட்டார்கள் என்றும், தையல் & எம்ப்ராய்டரி கலையையெல்லாம் ஏன் ஒரு படிப்பாக கொண்டு வந்து, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்.

உடையை தேட வேண்டியுள்ளது: பெண்களின் உடலில் உடை எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியது வருத்தமாக இருப்பதாக பேசிய நயினார் நகேந்திரன், தற்போது பிரபலமாக உள்ள ’ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா’ என்பதெல்லாம் என்ன மாதிரியான பாடல் என்று கேள்வி எழுப்பி, இது போன்ற பாடல் வரிகளால் 50 வருடங்களுக்கு பின்னால் வருவோர், இதுதான் நம் முன்னோர்களின் கலாச்சாரமாக இருந்ததாக எண்ணி விடமாட்டார்களா என்றும், இப்போது வரும் ’ஆலுமா டோலுமா’ போன்ற பாடல் வரிகளைப் புரிந்து கொள்வதற்கு இந்தி படித்துவிட்டா அர்த்தம் தேட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக எம்.எல்.ஏ., பொள்ளாட்சி ஜெயராமன், சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு இவ்வளவு ஆகிறது என்பது நயினாருக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய நயினார் நாகேந்திரன், தனது மனைவி தைக்க கொடுத்த துணியை வாங்க செல்லும் போது இதையெல்லாம் தெரிந்து கொண்டதாக தெரிவித்தார்.

பண்பாட்டை காக்க வேண்டும்: எனவே இதுபோன்ற சூழலில், நமது தொன்மையான பண்பாட்டை நாம் போற்றிப் பேணிக்காக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தி அல்லாத தமிழ் பாடல்கள் இருக்கவேண்டுமென நயினார் நாகேந்திரன் குறிப்பிடுவது மிக சிறந்ததாக பார்க்கப்படுகிறது என தெரிவித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரைக்கு பிறகு பேசிய எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் நாள் தோறும் அவை தொடங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Video: சோனியா காந்தி தொகுதியில் பட்டியல் இன மாணவரை, கால்களை நக்கச்சொல்லி கொடூரத்தாக்குதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.