சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப்.29) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராஜா, கடந்த அதிமுக ஆட்சியில் மற்றும் தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
அப்போது, “மருந்து முதல் மருத்துவ ஊழியர்களின் பணி நியமனம் வரை அனைத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் காணப்பட்டதாகவும் தற்போதைய திமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை காணப்படுகிறது” என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “If You are Bad I am Your Dad (நீ கெட்டவன் எனில் நானும் கெட்டவன்) என்ற வசனம் எங்களது தலைவருக்குப் பொருந்தும்.
பொதுவாக எல்லாருக்கும் இதயம் ‘லப் டப் லப் டப்’ என்று தான் துடிக்கும். ஆனால், விமர்சனங்களை வைக்கும் மனிதநேயம் இல்லாதவர்களுக்கு இதயம் ‘டப் டப்’ என்று துடிக்கும்’’ என்றார்.
மேலும், கரோனா காலத்தில் மருந்துகள் முதல் மருத்துவ நியமனம் வரை ஊழலானது கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: துயரத்தில் இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 50 லட்சம் அளித்த ஓபிஎஸ் - நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்...