ETV Bharat / state

'அதிகார அத்துமீறல் நடத்தும் அமைச்சர் வேலுமணியின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்' - ஸ்டாலின் - சிம்பிளிசிட்டி உரிமையாளர் கைது

ஊடகத்தினர் மீது வன்மம் கொண்டு காவல் துறையைப் பயன்படுத்தி அதிகார அத்துமீறல் நடத்தும் அமைச்சர் வேலுமணியின் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

MKStalin Slams SP Velumani & Coimbatore police

author img

By

Published : Apr 24, 2020, 4:11 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றினால் ஊடகத்தினரும் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் பணியில் போதிய கவனம் செலுத்தாமல் அவர்களைப் பழிவாங்கும் செயல்பாடுகளில் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருவது கண்டனத்திற்குரியது.

கோவையில் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை 5:30 மணி முதலே வேலைபார்த்து வரும் நிலையில், பகல் 11 மணி வரை அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்பதில் தொடங்கி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என்பதையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி களத்திலேயே இல்லை என்பதையும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் சுட்டிக்காட்டியதை, தனியார் ஆன்லைன் இணைய இதழ் ஒன்று வெளியிட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக அங்கு பணியாற்றிய பத்திரிகையாளர்கள் இருவரை விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் அழைத்துச் சென்று பலமணி நேரம் அடைத்து வைத்திருந்துள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் அந்த இதழின் நிர்வாக இயக்குநரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இது சட்டவிரோத செயல்பாடாகும்; ஆணவ அதிகாரத்தின் வெளிப்பாடாகும்.

ஊடகத்தினர் மீது வன்மம் கொண்டு, ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சரின் நிழலாக வலம்வரும் அமைச்சர் வேலுமணியும் காவல் துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவதை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பேரிடர் நேரத்தில், இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, அந்த இதழின் உரிமையாளரை விடுவித்து, ஊடகத்தினர் இடையூறின்றி சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.