சென்னை: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் கீழ் தீர்வு காணப்பட்ட 50,643 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் கீழ் இதுவரை 1,21,720 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 50,643 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, அவர்களில் 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும் இத்துறையின் கீழ் தீர்வு காணப்பட வேண்டிய மனுக்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்